லட்சுமி மேனன் மீண்டும் வாய்ஸ்

லட்சுமி மேனன் மீண்டும் வாய்ஸ்

lakshmi2 lakshmimenon-1

டிசம்பர் 4, சாகசம் படத்துக்காக நடிகை லட்சுமி மேனன் மீண்டும் பாடல் பாடியுள்ளார். கண்ணன் இயக்கத்தில் விமல் நடித்த படம், ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா‘. இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்திருந்தார். இதில் ‘குக்குறு குக்குறு‘ என்ற பாடலை பாடியிருந்தார் லட்சுமி மேனன். இந்தப் பாடல் ஹிட்டானது. இதையடுத்து பிரஷாந்த் நடிக்கும் ‘சாகசம்‘ படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் லட்சுமி மேனன். டூயட் பாடலான இதை மதன் கார்க்கி எழுதியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து லட்சுமி மேனன் பாடியுள்ளார்.