மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய யாசூப்பை தூக்கிலிட இடைக்கால தடை

j2

1993–ம் ஆண்டு மும்பையில் தொடர் குண்டு வெடிப்பில் 257 பேர் பலியானார்கள். 713 பேர் காயம் அடைந்தனர். இந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான யாகூப் மேமன் 1994–ம் ஆண்டு காத்மாண்டுவில் கைது செய்யப்பட்டான். 2007–ம் ஆண்டு தடா கோர்ட்டு யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

இதுதொடர்பாக அனுப்பப்பட்ட கருணை மனுவை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிராகரித்தார்.

இந்த நிலைகயில் தனது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரி யாகூப்மேமன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தான்.

20 ஆண்டுகளுக்கு மேல் தான் சிறையில் இருப்பதால் தனது தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்து இருந்தான்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இன்று யாகூப்மேமனை தூக்கிலிட இடைக்கால தடை விதித்தது.