மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அதிகார பூர்வ துவக்க விழா

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அதிகார பூர்வ துவக்க விழா

SIM_1457SIM_1481

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அறிமுக விழா 7/7/2014 அன்று சுகாதார அமைச்சின் பல்நோக்கு மண்டபத்தில் மாபெறும் சரித்திர நிகழ்வாய் நடைபெற்றது.

 சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ச..சுப்பிரமணியம் இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் திரு.கைரி ஜமாலுத்தீன்   இளைஞர் மற்றும் விளையாட்டு துறை துணை அமைச்சர் டத்தோ M.சரவணன், கல்வியமைச்சர் திரு பி..கமலநாதன், மக்கள் முற்போக்கு கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ கேவியஸ்,  ஆகியோர் இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தை அதிகார பூர்வமாக துவங்கி வைத்தனர். அறிமுக விழாவில் மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் அடுத்த 10ஆண்டிற்கான செயல்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

மலேசிய இந்தியர் விளையாட்டு மற்றும் கலாச்சார அறவாரியத்தின் தலைவர் டத்தோ டி.மோகன் தனது உரையில் இந்த அறவாரியம் அமைக்கபட்டதன் நோக்கத்தை விளக்கினார். ஆறவாரியம் இந்தியர்களை விளையாடு துறையில் மேம்படுத்துவதற்க்கான நடவடிக்கைகளில் ஈடுபடும். மலேசிய இந்தியர்கள் விளையாட்டு துறையில் மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் 70-80ஆம் ஆண்டுகளில் நமது இளையோர்கள் புரிந்த சாதனைககள் மீண்டும் புரிய வேண்டும் எனவும் கூறினார்

SIM_1385 SIM_1399 SIM_1519 SIM_1429 SIM_1339 SIM_1528