ப்ரீம் கோர்ட் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்க்கு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு.

ப்ரீம் கோர்ட் சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்திற்க்கு சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கை விரைவில் முடிக்க உத்தரவு.

4

சென்னை சட்டக் கல்லூரியில் கடந்த 2008ல் மாணவர்களுக்கிடையே கல்லூரி வளாகத்திற்குள்ளேயே சண்டை ஏற்பட்டது. இந்த தாக்குதலில் பாரதி கண்ணன், அய்யாதுரை, ஆறுமுகம் மற்றும் சித்திரைச்செல்வன் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மோதல் தொடர்பாக 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொலை முயற்சி, கூட்டு சதி உள்ளிட்ட பிரிவுகளில் கைது செய்யப்பட்டனர்.

சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அளித்த தீர்ப்பு வருமாறு: மாணவர்களிடையே ஏற்பட்ட தாக்குதல் தொடர்பான விவகாரத்தை மாநில அரசு சரியான முறையில் விசாரித்திருக்கலாம். ஆனால், மாநில அரசு அக்கறை காட்டவில்லை. இந்த வழக்கில் இதுவரை 3 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆனால், அவற்றை நீதிமன்றம் இதுவரை ஏற்கவில்லை. இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு இதுவரை வழக்கு விசாரணை நடக்கவில்லை.

எனவே, இந்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் ஒரு ஆண்டுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை தொடர்பான அறிக்கையை 2 மாதங்களுக்கு ஒரு முறை உயர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.