பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு

பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5 குறைப்பு

petrol

பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி பட்ஜெட்டில் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து அதன் விலை லிட்டருக்கு ரூ.5 குறைந்துள்ளது.

மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது, பிரீமியம் பெட்ரோலுக்கான கலால் வரி ரூ.7.50 லிருந்து ரூ.2.35 ஆக குறைக்கப்படுவதாக அறிவித்தார்.

பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வுக்குத் தகுந்தாற்போல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2008-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

பிரீமியம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.15.50ம், சாதாரண பெட்ரோலுக்கு ரூ.9.20ம் ,

பிரீமியம் டீசலுக்கு ரூ.5.75ம், சாதாரண டீசலுக்கு ரூ.3.46ம் கலால் வரியாக வசூலிக்கப்படுகிறது.

இந்நிலையில் பட்ஜெட்டில் பிரீமியம் பெட்ரோலுக்கு லிட்டருக்கு ரூ.5 கலால் வரி குறைக்கப்பட்டதால் அதன் விலையும் உடனடியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் பிரீமியம் டீசலுக்கான கலால் வரியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

தில்லியில் சாதாரண பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.55ஆக உள்ள நிலையில், பிரீமியம் பெட்ரோல் விலை ரூ.83.03 ஆக இருந்தது.