பிரியங்கா சோப்ராவின் தங்கை: நிர்வாண போஸ் படங்கள் வெளியிட்டு

பிரியங்கா சோப்ராவின் தங்கை: நிர்வாண போஸ் படங்கள் வெளியிட்டு

VM_160849000000

நவம்பர் 4, பிரபல பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான பிரியங்கா சோப்ராவின் தங்கை பாலிவுட்டில் அறிமுகமாகும் படத்தில் நிர்வாண போஸ் கொடுத்துள்ளார். இதற்கு பிரியங்கா சோப்ராவும் ஓ.கே. சொன்னார். விஜய் ஜோடியாக ‘தமிழன் படத்தில் நடித்தவர் முன்னாள் உலக அழகி பிரியங்கா சோப்ரா. இந்தியில் முன்னணி நடிகைகள் வரிசையில் இருக்கிறார். இவருக்கு உடன் பிறந்த தங்கைகள் இல்லாவிட்டாலும் உறவு முறையில் பரிணிதி சோப்ரா, மீரா சோப்ரா (நிலா) என இரண்டு சகோதரிகள் உள்ளனர். இவர்களும் திரையுலகில் நடித்து வருகின்றனர். தற்போது மற்றொரு உறவுக்கார தங்கை மன்னாரா நடிக்க வருகிறார். ‘ஸ்சித் படம் மூலம் இந்தி திரையுலகில் அறிமுகமாகிறார். இம்மாதம் படம் திரைக்கு வரவுள்ளது. இதன் புரமோஷனுக்காக மன்னாராவின் நிர்வாண போஸ் படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்த இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி எண்ணி உள்ளார். அதற்கு மன்னாராவும் சம்மதம் தந்தார். இதற்கான போட்டோ செஷன் நடந்துள்ளது. இணைய தளத்தில் படங்களும் வெளியிடப் பட்டுள்ளது.

நிர்வாண போஸ் தருவதுபற்றி மன்னாரா கூறியதாவது:நாம் 2014ம் ஆண்டில் இருக்கிறோம். தலைமுதல் கால்வரை மூடிக்கொண்டு இருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அப்படி மூடிக்கொண்டு நடிக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு சீரியலில் நடித்துவிட்டு போகலாம். எனக்கு சூப்பரான உடற்கட்டு இருக்கிறது. அதை வெளிக்காட்டுவதில் தயக்கம் இல்லை என்றார். ‘இதுபற்றி உங்கள் அக்கா பிரியங்கா சோப்ராவிடம் கேட்டீர்களா? என்றதற்கு,‘இதற்கான போட்டோ செஷன் நடப்பதற்கு முன் பிரியங்காவுக்கு போன் செய்து பேசினேன். அவர் ஓ.கே. சொன்னார். அதேநேரம் நிர்வாண போஸ் கொடுத்தாலும் அதில் கலைநயம் இருக்க வேண்டும் ஆபாசமாக இல்லாமல் பார்த்துக்கொள் என அறிவுரை சொன்னார். அதை நான் ஏற்றுக்கொண்டேன்.