பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்

India_pakistan_2448518b

33 ஆண்டுகளில் இல்லாத வகையில் காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வரும் தாக்குதலால் 15,000 குடும்பங்கள் சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி உள்ளன. போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஷ்மீர் எல்லையில் கடந்த ஒன்றரை மாதங்களாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்களை நடத்தி வருகிறது. சர்வதேச எல்லையையொட்டி உள்ள ஆர்.எஸ்.புரா, அர்னியா பகுதிகளில் இந்திய நிலைகள் மட்டுமின்றி, எல்லையோர இந்திய கிராமங்கள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்துவதால் அங்கு வசிக்கும் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்துள்ளனர். தாக்குதல் நீடிப்பதால் 15,000க்-கும் மேற்பட்ட குடும்பத்தினர் தங்களது சொந்த கிராமங்களில் இருந்து வெளியேறி தற்காலிக முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். இதனால் குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்ல முடியாமலும், கிராம மக்கள் பல்வேறு இன்னல்களுக்கும் ஆளாகியுள்ளனர்.

மக்கள் வெளியேறுவதை தடுப்பதற்காக எல்லையோர கிராமங்கள் அனைத்திலும் ஜம்மு காஷ்மீர் அரசின் சார்பில் பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணி ஒரு வாரத்திற்குள் முடிக்கப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் சஜத் அகமது கிச்லு தெரிவித்துள்ளார். தாக்குதல் நடைபெறும் பகுதிகளை பார்வையிட்ட எல்லை பாதுகாப்பு படை தளபதி பதக் 1971ம் ஆண்டு நடைபெற்ற போருக்கு பின்னர் தற்போது தான் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் அதிகரித்திருப்பதாக குறிப்பிட்டார்.