நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி.

நெய்வேலி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி.

3

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள் பணி புரிந்து வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி இவர்களை நிரந்தரம் செய்யக்கோரி 11 சங்கங்கள் கடந்த  3ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளன. ஆனால் இதற்கு என்எல்சி நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றது. இதனை மீறி போராட்டம் தொடர்ந்து  நடக்கிறது. இது  தொடர்பாக ஏற்கனவே தொழிற்சங்கங்களுடன் என்எல்சி நிர்வாகம் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் 4ம் கட்ட பேச்சுவார்த்தை  புதுவையில்  உள்ள மத்திய உதவி தொழிலாளர் ஆணைய அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது. இதுவும் தோல்வியில் முடிந்தது.