நடிகைகள் திருமண சீசன்

நடிகைகள் திருமண சீசன்

Monika marriage photos

ஜனவரி 13, நடிகைகள் ‘திருமண சீசன்’ களை கட்டுகிறது. இவ்வருடம் நிறைய கதாநாயகிகள் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆக தயாராகிறார்கள். முதலாவதாக மோனிகா திருமணம் நேற்று நடந்துள்ளது. இவர் முஸ்லிம் மதத்துக்கு மாறி மாலிக் என்பவரை மணந்துள்ளார்.

அடுத்து திரிஷா திருமணம் நடக்க உள்ளது. தயாரிப்பாளர் வருண்மணியனை மணக்கிறார். வருகிற 23–ந்தேதி இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இருவீட்டு பெற்றோரும் செய்து வருகின்றனர். திருமணத்தையொட்டி திரிஷாவுக்கு ரூ. 7 கோடி வெளிநாட்டு சொகுசு காரை வருண்மணியன் பரிசாக வழங்குகிறாராம்.

நடிகர், நடிகைகளுக்கு கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் 24–ந்தேதி திரிஷா விருந்து அளிக்கிறார். மார்ச் மாதம் திருமண நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நிச்சயதார்த்தத்தில் திருமண தேதியை முடிவு செய்கின்றனர்.

இதுபோல் ஸ்ரேயாவுக்கும் இவ்வருடம் திருமணம் நடக்க உள்ளது. தமிழ், தெலுங்கில் பிசியாக நடித்து வந்த அவருக்கு இப்போது படங்கள் இல்லை. ஒரே ஒரு தெலுங்கு படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழ் பட உலகம் அவரை ஒதுக்கி விட்டது. இதனால் விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். அடுத்த மாதத்துக்குள் மாப்பிள்ளை முடிவாகி விடும் என தெரிகிறது.

சார்மிக்கும் இவ்வருடம் திருமணம் நடக்க உள்ளது. இவர் ‘காதல் அழிவதில்லை’ படம் முலம் நாயகியாக அறிமுகமானார். ‘ஆஹா எத்தனை அழகு’ படத்திலும் நடித்தார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மார்க்கெட் சரிந்ததால் மாப்பிள்ளை பார்க்கின்றனர்.

அனுஷ்காவுக்கும் இந்த வருடம் இறுதியில் திருமணம் நடக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு 33 வயது ஆகிறது. இதனால் திருமணத்தை விரைவில் முடிக்க பெற்றோர் ஆர்வம் காட்டுகின்றனர். மாப்பிள்ளை பார்த்து விட்டதாகவும் அதனை ரகசியமாக வைத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக படங்களில் நடிப்பதை குறைத்துள்ளார்.

‘பாகுபலி’, ‘ருத்ரமாதேவி’ படங்களில் நடிக்கிறார். இவற்றின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளன. வேறு தெலுங்கு படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை. இதுபோல் அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற 29–ந்தேதி ரிலீசாகிறது. வேறு தமிழ் படங்கள் நடிக்க அவர் கால்சீட் கொடுக்கவில்லை.