தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 370 ரன் வெற்றி இலக்கு

தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட்: இலங்கை அணிக்கு 370 ரன் வெற்றி இலக்கு

safrica

இலங்கை- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கலேவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

எல்கார், டுமினி சதத்தால் அந்த அணி முதல் இன்னிங்சில் 455 ரன்கள் குவித்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 292 ரன்னில் ஆல் அவுட் ஆனது. தரங்கா 83 ரன்னும், மாத்யூஸ் 89 ரன்னும்எடுத்தனர்.

163 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்கை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. டிவில்லியர்ஸ் அதிக பட்சமாக 51 ரன் எடுத்தார். இதனால் இலங்கை அணிக்கு 370 ரன்கள் வெற்றி இலங்கை தென்ஆப்பிரிக்கா நிர்ணயித்தது.

370 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.