துபாயில் வரவேற்பை பெறும் சைக்கிள் தனி பாதைகள்

துபாயில் வரவேற்பை பெறும் சைக்கிள் தனி பாதைகள்

cycle_2115828g

மே 25, சுற்றுப்புற சூழலுக்கு ஏற்ற வகையிலும் உடற்பயிற்சியாகவும் திகழக்கூடிய சைக்கிள் பயணத்துக்கு தற்போது உலகம் முழுவதிலும் முக்கியத்துவம் கொடுக்க துவங்கி விட்டனர்.

சுற்றுப்புற சூழல் பாதுகாப்பை அதிகரிப்பதிலும் துபாய் நகரம் முன்னிலை வகிக்கிறது. துபாயில் பல்வேறு இடங்களில் சைக்கிளில் செல்லும் வகையில் தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

துபாய் அரசு 2020ம் ஆண்டிற்குள் 900 கிலோ மீட்டர் அளவிற்கு விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கடற்கரை,பூங்காக்கள்,கடைகள்,மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பல முக்கிய இடங்களை இப்பாதைகள் மூலம் இணைக்கும் வகையில் வரைபடங்கள் உருவாக்கப்பட்டு திட்டமிடப்பட்டுள்ளது.