தலையால் கண்ணாடியை உடைத்த அஜீத்

தலையால் கண்ணாடியை உடைத்த அஜீத்

aj2

ஜனவரி 22, ரிஸ்க் எடுக்கிறது ரஸ்க் சாப்பிடுற மாதிரி என்று அடிக்கடி அபாயகரமான வேலையில் இறங்கிவிடுவார் அஜீத். அப்படிதான் ஆரம்பம் படத்தில் ஓடுகிற காரில் இருந்து குதித்து காலை முறித்துக் கொண்டார். என்னை அறிந்தால் படத்திலும் அவரது ரிஸ்க் ரஸ்க் தொடர்கிறது.

அஜீத்தின் கடைசி நான்குப் படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாதான் என்னை அறிந்தால் படத்துக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்.

ஒரு சண்டைக் காட்சியில் அஜீத் தலையால் கண்ணாடியை உடைப்பது போல் காட்சி. காயம்படும், டூப் போடலாம் என்று சொன்னதை கேட்காமல் தல யே தனது தலையால் கண்ணாடியை உடைத்திருக்கிறார்.

இந்த மாதிரி ஏதாவது ரிஸ்க் எடுத்து நம்மை பதட்டப்பட வைத்துவிடுவார் என்றார் சில்வா. இதில் இவர் சின்ன வேடம் ஒன்றில் நடித்துமிருக்கிறார்.