தனுஷ் நடித்த அனேகன் நவம்பரில் வெளியிடு

தனுஷ் நடித்த அனேகன் நவம்பரில் வெளியிடு

10

 

கே.வி ஆனந்த் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள அனேகன் பட வெளியீடு. வரும் நவம்பர் 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கான இசையமைப்பை முடித்துவிட்டாராம் ஹாரிஸ் ஜெயராஜ். தீபாவளிக்கு பாடல்களை வெளியிட்டுவிடலாம் என தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். பாலிவுட்டிலிருந்து அமிரா தஸ்தூர் நாயகியாக அறிமுகமாகிறார். ரொம்ப நாளைக்குப் பிறகு கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திராத பல புதிய லொகேஷன்கள் இந்தப் படத்தில் உண்டாம். மாற்றானில் கேவி ஆனந்த் சறுக்கினாலும், மிகுந்த நம்பிக்கையுடன் மீண்டும் ஒரு மெகா வாய்ப்பை அவருக்கு வழங்கியுள்ளது ஏஜிஎஸ் நிறுவனம்.