சென்னை – பெங்களூரு இடையே மீண்டும் பேருந்துகள் இயக்கம்.

சென்னை - பெங்களூரு இடையே மீண்டும் பேருந்துகள் இயக்கம்.

2

 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களால் கடந்த 2 நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த சென்னை – பெங்களூரு இடையேயான கர்நாடக அரசுப் பேருந்துகள் சேவை இன்று வழக்கம் போல துவங்கியது.