ஒரே நாளில் 10 சாதனைகள்: கேல் அபாரம்

ஒரே நாளில் 10 சாதனைகள்: கேல் அபாரம்

Chris Gayle

பிப்ரவரி 26, ஜிம்பாப்வே அணியுடனான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கேல்  – சாமுவேல்ஸ் ஜோடி 372 ரன் விளாசியதில் பல சாதனைகள் உடைந்து நொறுங்கின.தனது 266-வது ஒருநாள் போட்டியில் நேற்று விளையாடிய கிறிஸ்கேல் 22வது சதத்தை விளாசினார். அத்துடன் நிற்காமல் ஜிம்பாப்வே பந்துவீச்சை தொடர்ந்து அடித்து நொறுக்கிய அவர் 215 ரன் எடுத்து அசத்தினார். இந்த அபார ஆட்டத்தால் பல சாதனைகள் முறியடிக்கப்பட்டன.