சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு

சிறந்த வீரராக மெஸ்சி தேர்வு

leo-mesi

20–வது உலக கோப்பை தொடரில் சிறந்த வீரராக தேர்வு செய்யப்படுபவருக்கு தங்க பந்து (கோல்டன் பால்) விருது வழங்கப்படும்.

இந்த விருதை பெறுபவருக்கான 10 பேர் கொண்ட பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் வெளியிட்டு இருந்தது. லியோனல் மெஸ்சி, டிமரியா, மாசிரோனா (அர்ஜென்டினா), தாமஸ், முல்லர், பிலிப் லாம், டோனி குரூஸ், ஹம்மல்ஸ் (ஜெர்மனி), ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), நெய்மர் (பிரேசில்), ரோபன் (நெதர்லாந்து) ஆகியோரது பெயர் இடம் பெற்று இருந்தது.

இதில் அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவருமான மெஸ்சி சிறந்த வீரருக்கான தங்க பந்து விருதை பெற்றார்.

சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டாலும் அர்ஜென்டினா கோப்பையை வெல்ல முடியாததால் அவர் மிகுந்த ஏமாற்றம் அடைந்தார்.

தங்க பந்து விருதை பெற்றபோது அவரது முகத்தில் எந்த சலனும் இல்லை. கோப்பையை இழந்த ஏமாற்றம் அவரது முகத்தை காட்டி கொடுத்தது.

அர்ஜென்டினா அணிக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து மரடோனா போல் பெருமை பெற இருந்த நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டார்.

உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை 4 முறை வென்ற அவரால் அர்ஜென்டினா அணிக்காக உலக கோப்பையை பெற்று தர இயலவில்லை. இனி இதுபோன்ற வாய்ப்பு கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

அடிக்கடி மைதானத்தில் வாந்தி எடுத்த அவரால் முழு திறமையுடன் விளையாட முடியவில்லையா? என்ற சந்தேகம் இறுதிப் போட்டியில் ஏற்பட்டது. கோடிக்கணக்கான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் நிறைவேற்ற முடியாமல் போனது துரதிஷ்டமே.

மெஸ்சி கூறும்போது, ‘‘இந்த நேரத்தில் தங்க பந்து விருது ஒரு விஷயமில்லை. உலக கோப்பைதான் முக்கியம். அதை கைப்பற்ற முடியாமல் போனது ஏமாற்றமே. நாங்கள் சிறப்பாக விளையாடி தோல்வி அடைந்ததுதான் மனதை மிகவும் பாதித்துள்ளது” என்றார்.