சிங்கப்பூர் தமிழர் ஹோட்டலில் மசால் தோசை சாப்பிட்ட மோடி

Online Tamil News Malaysia

Online Tamil News Malaysia

நவம்பர் 25, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக மலேசியா சென்றார். அங்கு நடைபெற்ற ஆசியான் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். அங்கு பிரதமர் நஜீப் மற்றும் தொழில் அதிபர்களை சந்தித்தார். மலேசிய வாழ் இந்தியர்களின் வரவேற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். மலேசியாவில் 3 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு திங்கள்கிழமை மாலை சிங்கப்பூர் சென்றார். அங்கு விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதிக்கு சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதில் சிங்கப்பூர் பிரதமர் லீ அவரது
மனைவி ஹோ சிங் ஆகியோருடன் செல்பி எடுத்துக்கொண்டார். லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள பிரபலமான இந்திய ஹோட்டலான, கோமளவிலாசில் மோடிக்கு சிங்கப்பூர் பிரதமர் விருந்தளித்தார். இதில் சிங்கப்பூர்
பிரதமர் லீ மனைவி ஹோ சிங்கும் கலந்து கொண்டார். தலைவர்கள் இருவரும் அந்த ஹோட்டலுக்கு நேரடியாக சென்று விருந்து உண்டது மிகவும் பெருமையாக கருதப்படுகிறது.