சகாப்தம் படத்துக்காக சாமுராய் ஸ்டைல் சண்டை

சகாப்தம் படத்துக்காக சாமுராய் ஸ்டைல் சண்டை

Sagaptham

டிசம்பர் 15, விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் ஹீரோவாக அறிமுகமாகும் படம், ‘சகாப்தம்’. நேஹா ஹிங் ஹீரோயினாக நடிக்கிறார். சுரேந்தர் இயக்குகிறார். இந்தப் படத்துக்காக தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா கடற்கரையில் சாமுராய் ஸ்டைல் வாள் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு வெளிநாட்டுப் பெண்கள், ஆப்ரிக்கா, ஆஸ்திரேய்லியா, பெல்ஜியம், ஜப்பான் நாடுகளை சேர்ந்த மார்சியல் ஆர்ட்ஸ் கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த சண்டைக்காட்சியில் ஜெகன், ரஞ்சித், சுரேஷ் ஆகியோரும் பங்கேற்றனர். மாஸ்டர் கேச்சா சண்டைக்காட்சிகளை அமைத்தார். ‘படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது. சிம்பு, ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் பாடிய பாடல் காட்சி மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருக்கிறது. இந்தப் பாடல் காட்சிக்கு முன்னணி டான்ஸ் மாஸ்டரை தேடிக்கொண்டிருக்கிறோம்’ என்று படக்குழுவினர் தெரிவித்தனர்.