கைப்பற்றப்பட்ட பைபிள்களை திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா?

கைப்பற்றப்பட்ட பைபிள்களை  திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா?

ஷா ஆலம், ஜூன் 18 -சிலாங்கூர் இஸ்லாமிய சமயத்துறையால் (ஜாயிஸ்) கைப்பற்றப்பட்ட பைபிள்களை மலேசிய பைபிள் சங்கத்திடம் திரும்ப ஒப்படைப்பதா? இல்லையா? என்ற முடிவை சிலாங்கூர் சுல்தான் மட்டுமே எடுப்பார் என்று அம்மாநில மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் குறித்து ஆட்சிக்குழு உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தாம் சுல்தானை சென்று சந்திக்கப் போவதாகவும் காலிட் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி 2 -ம் தேதி ஷா ஆலமில் உள்ள பிஎஸ்எம் அலுவலகத்தில் புகுந்த ஜாயிஸ் அதிகாரிகள், 321 மலாய் மொழி பைபிள்களையும் (அல்கிதாப்) இபான் பைபிள்களையும் (புப் கூடுஸ்) பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

khalid_ibrahim46