கேரளா வருகிறார் பிரேசில் கால்பந்து வீரர்

கேரளா வருகிறார் பிரேசில் கால்பந்து வீரர்

Neymar

உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். பிரேசிலை சேர்ந்த இவரது ஆட்டம் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக இருந்தது. கொலம்பிய வீரர் ஏற்படுத்திய காயம் காரணமாக அவர் எஞ்சிய ஆட்டத்தில் விளையாட முடியாத நிலை உருவானது.

கொலம்பியா அணிக்கு எதிராக கால் இறுதி ஆட்டத்தில் பந்தை எடுக்க முயன்ற போது நெய்மரை அந்த அணி வீரர் ஜூவான் ஜூனிகா முழங்கால் மூலம் முதுகில் தாக்கினார். இதனால்தான் அவருக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டது. இதன் காரணமாகவே நெய்மர் உலக போட்டியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது. இந்த முதுகெலும்பு முறிவை சரிசெய்வதற்காக நெய்மர் கேரளா வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக பிரேசில் கால்பந்து கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டியுடன் பேசியுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் இக்கூற்றை மறுத்த அவர் கேரளாவில் உள்ள கால்பந்து ரசிகர்கள் நெய்மருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்தை ஏற்று சுகாதார துறை அமைச்சர் சிவகுமாரிடம் நெய்மரின் காயம் குறித்து அறிந்து அவருக்கு எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்கலாம் என ஆராயுமாறு கூறியுள்ளதாக அவர் கூறினார். நெய்மர் விருப்பப்பட்டால் அவருக்கு சிகிச்சை அளிக்க கேரளா நடவடிக்கை மேற்கொள்ளும் என அவர் மேலும் தெரிவித்தார்.