ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை

ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் கொலை

isis

நவம்பர் 28, ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 39 இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாக்தாத் -சிரியாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றி ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய அரசாக அறிவித்து உள்ளனர். ஈராக்கின் 2வது பெரிய நகரமான மொசூல் நகரத்தில் ஜூன் 10-ந் தேதியன்று 91 வெளிநாட்டவரை ஐ.எஸ். தீவிரவாதிகள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர். இவர்களில் 40 பேர் இந்தியவர்கள். 51 வங்கதேச நாட்டவர். கடத்தப்பட்ட இந்தியர்களில் பெரும்பாலானோர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரையும் மீட்க பஞ்சாப் முதல்வர் பாதல் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்ததுடன் கடத்தப்பட்டோர் குடும்பத்தினருக்கு மாதாந்திர நிதி உதவியையும் அறிவித்திருந்தார்.

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் இந்த தொழிலாளர்களை விடுதலை செய்வது குறித்து ஐ.எஸ் இயக்க தலைவர் பாக்தாதியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் அது வெற்றி பெறவில்லை.

இருப்பினும் 40 இந்தியர்களின் நிலை என்ன என்று தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் குர்திஸ்தானின் ஏர்பில் நகரில் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த ஷபி மற்றும் ஹாசன் ஆகியோர் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளனர். அந்தப் பேட்டியில் “கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஹர்ஜீத் என்பவர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பி வந்தார். அவர் எங்களிடம் கடந்த ஜூலை மாதம் 39 இந்தியர்களையும் தீவிரவாதிகள் படுகொலை செய்ததை தாம் நேரில் பார்த்ததாக ஹர்மீத் தெரிவித்தார்” என்று கூறியுள்ளனர்.

ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பி வந்த வங்கதேசத்தவரின் இந்தப் பேட்டி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்தச் செய்தியை உறுதிப்படுத்த முடியவில்லை.