’ஐ’படத்தின் மற்றொரு அற்புதம்.

’ஐ’படத்தின் மற்றொரு அற்புதம்.

10

’ஐ’படத்தின் தெலுங்கு ஆடியோவை விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள ஆஸ்கார் ரவிச்சந்திரன், இந்த விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ஜாக்கிசானை வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் பிரிமியர் ஷோக்களை வெளிநாடுகளில் நடத்தவும் திட்டமிட்டுள்ளார். அதன்படி, 2 இடங்களில் பிரிமியர் ஷோக்களை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக சிங்கப்பூரையும், அமெரிக்காவையும் தேர்வு செய்துள்ளார். இதில், ஏதாவது ஒரு பிரிமியர் ஷோவில் ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலன் கலந்து கொள்வார் என்றும் தெரிவித்துள்ளார்.