எபோலா நோய்க்கு மருந்தை கண்டுபிடித்துள்ளது: அமெரிக்கா

எபோலா நோய்க்கு மருந்தை கண்டுபிடித்துள்ளது: அமெரிக்கா

ebolavirusdiseasepicture

உலகை அச்சுறுத்தி வரும் எபோலா நோய்க்கு அமெரிக்கா ஷ்மாப் எனும் மருந்தைக் கண்டு பிடித்துள்ளதாகவும், அம்மருந்தை லைபீரியாவுக்கும் தர சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவி வரும் எபோலா நோய்க்கு இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவும் அபாயம் இருப்பதால் உலக சுகாதார மையம் அவசர நிலையைப் பிரகடனம் செய்துள்ளது.

எபோலா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதாலும், குணப்படுத்தும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைவு என்பதாலும், அமெரிக்காவின் மாப்பயோ பார்மாசிடிகள் நிறுவனம் மருந்து ஒன்றைக் கண்டுபிடித்து அதற்கு ஷ்மாப் என்றும் பெயரிட்டுள்ளது.

இந்த மருந்து சமீபத்தில் நோய் தொற்றோடு அமெரிக்கா திரும்பிய இரண்டு சமூகநல ஆர்வலர்களுக்கு இந்த மருந்து வழங்கப்பட்டதில் அவர்கள் குணமடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து எபோலா வைரஸ் நோயால் கடுமையாக பாதிப்படைந்த நாடுகளுள் ஒன்றான லைபீரியா தங்கள் நாட்டுக்கு இம்மருந்தை வழங்குமாறு கேட்டுக்கொண்டதாகவும் அதற்கு அமெரிக்கா சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது