ஊட்டி படகு இல்லத்துக்கு 47 புதிய படகுகள்

ஊட்டி படகு இல்லத்துக்கு 47 புதிய படகுகள்

boat1

மார்ச் 24, நீலகிரி மாவட்டத்தில் கோடை கால விடுமுறையின்போது ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா மற்றும் தொட்டபொட்டா போன்ற பகுதிகளுக்கு வந்து செல்கின்றனர். தற்போது ஊட்டி படகு இல்லம் கட்டுப்பாட்டில் 31 மோட்டார் படகுகள், 14 துடுப்பு படகுகள், 93 மிதி படகுகள் உள்ளன.

எனினும், விடுமுறை காலங்களில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இதுபோதுமானதாக இல்லை. இந்தநிலையில், இம்முறை சுற்றுலாத்துறை நிதியின்கீழ் ரூ.40 லட்சத்தில் 47 படகுகளை வாங்க படகு இல்லம் முடிவு செய்தது. 47 படகுகளில் 33 மிதி படகுகளும், 7 மோட்டார் படகுகளும் அடங்கும். தற்போது 10 படகுகள் வந்து சேர்ந்துள்ளன. மேலும், படகு இல்லத்தை பொலிவுப்படுத்தும் பணிகளிலும் சுற்றுலாத்துறை மும்முரமாக ஈடுபட்டுள்ளது.