இஸ்ரேல் தலைநகர் மீது சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் தலைநகர் மீது சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல்

missile

பாலஸ்தீன தலைநகரான காசா பகுதியிலிருந்து தங்கள் நாட்டை தாக்கும் வகையில் நிலைநிறுத்தப்பட்டிருந்த ஏவுகணைகள் மீது நேற்று இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியது. அதில் 4 பொதுமக்கள் உள்பட 10 பேர் பலியானதுடன் 40 பேர் படுகாயமடைந்தனர். அதே போல் அங்குள்ள இஸ்லாமிய ஜிகாத் அமைப்பை சேர்ந்த போராளிகள் காரில் வந்து கொண்டிருந்தபோது, நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் 5 போராளிகள் பலியானதாக கூறப்பட்டது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தலைநகரான ஜெருசலேம் மீது சக்தி வாய்ந்த ஏவுகணை தாக்குதல் நடைபெற்றது. நகரம் முழுவதும் மூன்று முறை மிக பலமான குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. குண்டுவெடித்த போது நான்கு முறை வானில் மின்னல் தோன்றியது போல் ஒளி தெரிந்தது. இந்த தாக்குதலை தாங்கள் தான் நடத்தியதாக எஸ்ஸடின் அல்-குஸ்ஸாம் படைப்பிரிவு உறுதி செய்துள்ளது. அப்படைப்பிரிவு ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத பிரிவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெருசலேம் மீது நான்கு எம்.75 ஏவுகணைகள் வீசியதாக அந்த அமைப்பு உறுதி செய்துள்ளது. மேலும் ஹய்பா நகரின் மீது ஆர்.160 என்ற ஏவுகணைத் தாக்குதலும் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. ஆனால் இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் அரசு எவ்வித தகவலையும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.