இலங்கையில் நடந்த போர் குற்றம் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

இலங்கையில் நடந்த போர் குற்றம் விசாரணை அறிக்கை இன்று தாக்கல்

i

செப்டம்பர் 14, 2009ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் தொடர்பான ஐ.நா. விசாரணை குழுவின் அறிக்கை இன்று ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறது. இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்த உச்சக்கட்ட போரில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை ராணுவம் மனித உரிமைகளை மீறிவிட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சாட்டின. போர்க்குற்றங்கள் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதற்காக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஒரு விசாரணை குழுவை நியமித்தது.