இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

இந்திய கடற்படைக்கு மேலும் ஒரு போர்க்கப்பல்: பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

pm-modi-nepal-parliament-address-360

புதிய போர்க்கப்பல் 6 ஆயிரத்து 800 டன் எடை கொண்டது. மும்பையில் மஜகாவ் டக்யார்டு லிமிடெட் என்ற நிறுவனம் போர்க்கப்பல் கட்டும் பணியை மேற்கொண்டது. கடற்படை சார்பில் வடிவமைப்பு பணிகள் செய்யப்பட்டன. கடந்த 2010-ம் ஆண்டே இந்த கப்பலை பயன்பாட்டுக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல்வேறு திட்டங்களால் தாமதம் ஆனது.

‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 16 பிரமோஸ் ஏவுகணைகளை ஏவலாம். இந்த போர்க்கப்பல் ஆயுத கள பயிற்சியை முடித்து உள்ளது. குறிப்பாக கார்வார் கடலில் பிரமோஸ் ஏவுகணை சோதனையை நடத்தியது. தற்போது இந்திய கடற்படையில் இணைந்து பணியாற்ற தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ‘ஐ.என்.எஸ். கொல்கத்தா’ போர்க்கப்பலை இந்திய கடற்படையில் இணைக்கும் விழா வருகிற 16-ந் தேதி மும்பையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று புதிய போர்க்கப்பலை பிரதமர் நரேந்திரமோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

ஐ.என்.எஸ். கொச்சி, ஐ.என்.எஸ். சென்னை ஆகிய போர்க்கப்பல்கள் வரிசையில் தற்போது ஐ.என்.எஸ். கொல்கத்தா இந்திய கடற்படையில் இணைக்கப்படுகிறது.

மேலும் 40 ஆயிரம் டன் எடை கொண்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற உள்நாட்டில் உருவாக்கப்படும் பிரமாண்ட விமானம் தாங்கி போர்க்கப்பல் கட்டப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் இன்னும் 3 அல்லது 4 ஆண்டுகளில் முடியும் என்று தெரிகிறது.