ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா வான்வழி தாக்குதல்

Operation Enduring Freedom

டிசம்பர் 18, ஆப்கானிஸ்தானில் பெரும்சவாலாக இருக்கும் தலீபான்களை குறி வைத்து அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நேட்டோ படையினர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்கா அடிக்கடி வான்வழி தாக்குதல் மூலமாக நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் தீவிரவாதிகளை ஒடுக்கி வருகிறது.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் நேற்று முன்தினம் அமெரிக்கா வான்வழி ஏவுகணை தாக்குதல் நடத்தியது. அப்போது ஒரு லாரி மீது ஏவுகணை வீசப்பட்டதில் அதில் இருந்த 4 பாகிஸ்தான் தலீபான் தீவிரவாதிகள் உள்பட 11 பேர் பலியானார்கள். இந்த தகவலை நன்கார்ஹர் மாகாணத்தைச் சேர்ந்த ஷெர்சாத் கவர்னர் உறுதிபடுத்தி உள்ளார்.