75 உயிர்களைப் பலி கொண்டது டெங்கி- டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம்

75 உயிர்களைப் பலி கொண்டது டெங்கி- டத்தோ டாக்டர் எஸ். சுப்ரமணியம்

subramaniamமலாக்கா, 16 ஜூன்- டெங்கியை ஒழிக்க இதுவரை பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், பொதுமக்களிடையே போதுமான விழிப்புணர்வு இல்லாததால், அவையனைத்தும் பலனளிக்கவில்லை.அவ்வகையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை டெங்கி காய்ச்சல் மற்றும் டெங்கி காய்ச்சலுக்குப் பலியானோரின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 10,910 பேர் டெங்கி காய்ச்சல் சம்பவங்களும் 22 உயிரிழப்புகளும் பதிவு செய்யப்பட்ட வேளையில், இவ்வாண்டு அவ்வெண்ணிக்கை 38,411-ஆக அதிகரித்துள்ளதுடன் 75 பேர் டெங்கி காய்ச்சலுக்குப் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்தார்.மேலும் கூறுகையில், மக்களிடம் டெங்கி காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு இல்லையென்றால் அரசாங்கம் எடுக்கும் எந்த நடவடிக்கைகளும் பலனளிக்காது. எனவே, இவ்வாறான மனநிலையை மாற்றிக்கொள்வதன் மூலம் டெங்கி கொசுக்கள் அடுத்த தலைமுறையையும் பாதிப்பதைத் தடுக்க முடியும் என்றார் அவர்.