தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு

Rain01

மே 4, தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கோடையின் உச்சக்கட்டமான ‘அக்னி’ நட்சத்திரம் இன்று (திங்கட்கிழமை) தொடங்க உள்ளது. கோடை வெயில் அதிகரிக்க தொடங்கும் வேளையில், அதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழகம், புதுச்சேரியில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்க கடலில் மேலடுக்கு சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.