பினாங்கு, 27 அக்டோபர் 2026 : ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.பி. ஆர்.எஸ்.என். ராயர் ஏற்பாட்டில், தீபாவளியையொட்டி ஜெலுத்தோங் நாடாளுமன்றத் தொகுதி தீபாவளி விருந்து பத்து லான்சாங் மக்கள் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் பினாங்கு மாநிலத் தலைவர் தனபாலன் நந்தகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் மாமன்றத்தின் துணைத் தலைவரும் நலன்புரிப் பிரிவுத் தலைவருமான தர்மமாமணி ஐயா ஏ. கிருஷ்ணன் உள்ளிட்ட உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, டத்தோ கெராமாட், சுங்கை பினாங், பத்து லான்சாங் பகுதிகளைச் சேர்ந்த வசதி குறைந்த குடும்பங்களுக்கு 300 உணவுப் பொருள் கூடைகள் வழங்கப்பட்டன.
மலேசியப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் ஒய்.பி. லிம் ஹுய் யிங், புக்கிட் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒய்.பி. ராம்கர்பால் சிங், செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம், பத்து லான்சாங் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பி. ஏ.டி. ஓங் மற்றும் பினாங்கு மாநகர மேயர் டத்தோ இரா. ராஜேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
மலேசிய இந்திய, சீன மற்றும் மலாய் சமூகங்களின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. தீபாவளி கொண்டாட்டத்தின் மூலம் சமூக ஒற்றுமையை வலுப்படுத்துவதுடன், தேவையுள்ள குடும்பங்களுக்கு உதவும் நோக்கிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.







