மே 4, பூகம்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் நேபாள விமான நிலையத்தில் பெரிய விமானங்கள் இறங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி கடும் பூகம்பம் ஏற்பட்டது. அதில் வீடுகள், கட்டிடங்கள் மற்றும் புராதன சின்னங்கள் இடிந்து தரைமட்டமாயின. அதில் ஆயிரக்கணக்கானவர்கள் பலியானார்கள். இதனால் சாவு எண்ணிக்கை 7200 ஆக உயர்ந்துள்ளது. பூகம்பத்தில் விமான நிலையங்கள் கடும் சேதம் அடைந்துள்ளன. காத்மாண்டு புறநகரில் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அங்கு ஓடும் தளம் சேதம் அடைந்துள்ளது.
Previous Post: லஞ்சம் வாங்கினால் 7 ஆண்டு சிறை
Next Post: தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு