என் தமிழ்

மலேசியாவில் 12 ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

siis

ஏப்ரல் 28, ஈராக் மற்றும் சிரியாவில் சில பகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள், மலேசியாவில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக 12 ஐ.எஸ். தீவிரவாதிகளை நேற்று முன்தினம் அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். தலைநகர் கோலாலம்பூரின் புறநகர் பகுதியான உளூ லன்காட் மற்றும் செராஸ் பகுதியில் பதுங்கி இருந்த தீவிரவாதிகளை போலீசார் பிடித்தனர். 12 தீவிரவாதிகள் பிடிபட்டது மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Scroll to Top