நேபாள பூகம்ப மீட்பு பணிகளுக்கு உதவும் இந்தியா-பிரான்ஸ் நாட்டு மோப்ப நாய்கள்

நேபாள பூகம்ப மீட்பு பணிகளுக்கு உதவும் இந்தியா-பிரான்ஸ் நாட்டு மோப்ப நாய்கள்

French-dogs

ஏப்ரல் 28, நேபாளத்தில் நிலநடுக்கம் தாக்கிய பகுதிகளில் குவியல், குவியலாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 3 நாட்களுக்கும் மேலாகி உள்ளதால், இந்த இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை விரைவில் மீட்க வேண்டியுள்ளது.
எனவே இந்த பணிகளுக்காக மோப்ப நாய்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்தியா ஏற்கனவே அனுப்பிவைத்துள்ள தேசிய பேரிடர் மீட்புக்குழுவில் மோப்ப நாய்களும் இடம் பெற்றுள்ளது. இதைப்போல பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளை சேர்ந்த 6 மோப்ப நாய்களுடன், 15 அதிகாரிகள் நேற்று நேபாளம் போய் சேர்ந்தனர்.