என் தமிழ்

தேசிய தலைவர் ஒப்புதல் தராவிட்டாலும் ம.இ.காவில் தேர்தல் நடக்கும்

Palanivel

பிப்ரவரி 20, ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் ஒப்புதலுடனோ ஒப்புதல் இன்றியோ சங்கப்பதிவதிகாரி சிபாரிசு செய்ததற்கு ஏற்ப, 2009 ஆம் ஆண்டு மத்திய செயலவைக்கு புதிய தேர்தலை நடத்தும் என ம.இ.கா துணை தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அறிவித்துள்ளார்.

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் சங்கப்பதிவதிகாரியின் முடிவை எதிர்த்து நீதிமன்றம் செல்வது நேரம் வீண் எனவும் அவர் குறிப்பிட்டார். சங்கப்பதிவதிகாரியின் முடிவினை எதிர்த்து நீதிமன்றம் செல்வதை நான் ஆதரிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Scroll to Top