என் தமிழ்

‘தளபதி வெற்றி கொண்டான்’ பிரம்மாண்ட விழா : முன்பதிவு டிக்கெட் விற்பனை தொடக்கம்

பினாங்கு, 23 ஜூலை 2026 : மலேசியாவில் நடைபெறவுள்ள ‘தளபதி வெற்றி கொண்டான்’ இசை மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிக்கான முன்பதிவு (Early Bird) டிக்கெட் விற்பனை அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.

வரும் செப்டம்பர் 5ஆம் தேதி, பினாங்கு மாநிலத்தின் ஜூரு ஆட்டோ சிட்டியில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சி, மலேசியாவில் விஜய் ரசிகர்களுக்காக ஏற்பாடு செய்யப்படும் மிகப்பெரிய மழை இசை அஞ்சலி நிகழ்வாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்பதிவு சலுகையின் கீழ், ‘ஜனநாயகன்’ மண்டலத்திற்கான டிக்கெட் RM69 என்ற சிறப்பு விலையில் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 72 மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும், அதன் பின்னர் டிக்கெட் விலை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் இசை நிகழ்ச்சிகள், டி.ஜே. நிகழ்ச்சிகள், நேரடி கலை நிகழ்ச்சிகள், பிரம்மாண்ட ஒளி அலங்காரம், மழை அனுபவம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெறவுள்ளன. மலேசியாவில் விஜய் ரசிகர்களை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய கொண்டாட்டமாக இது அமையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு டிக்கெட்டுகள் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வழங்கப்படுவதால், ரசிகர்கள் தங்களது இடத்தை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Scroll to Top