என் தமிழ்

மோசமாக நடிகை தமன்னா, மோசமாக டைரக்டர் பிரபுதேவா

tamanna12

பிப்ரவரி 20, பாலிவுட்டில் சிறந்த நடிகர், நடிகைகளுக்கு மட்டும் விருது வழங்காமல் மோசமான நடிப்பினை வெளிப்படுத்தியவர்களையும் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது ஒரு அமைப்பு. அந்த விருதின் பெயர் “கோல்டன் கேலா”. பர்மா என்பவர் இதை துவங்கினார். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதுகளை அவர் வழங்கி வருகிறார். நடிகர், நடிகைகள் ஜாலிக்காக இந்த விருதை நேரில் சென்று வாங்குகிறார்கள். கடந்த வருடத்தில் மோசமாக நடித்த நடிகர், நடிகைகளுக்காக விருது வழங்கும் விழா டெல்லியில் அடுத்த மாதம் நடக்கிறது. மிகவும் மோசமாக நடித்த நடிகை விருது  தமன்னாவுக்கு வழங்கப்படுகிறது. இந்தியில் ஆக்‌ஷன் ஜாக்சன் படத்தை எடுத்த பிரபுதேவாவுக்கு கடந்த வருடத்தின் மோசமான டைரக்டர் விருது வழங்கப்படுகிறது.

Scroll to Top