தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கூலர்

தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு கூலர்

beer

பிப்ரவரி 5, தமிழகத்தில் 6,823 டாஸ்மாக் மதுபான கடை செயல்படுகிறது. ஆனால், பல டாஸ்மாக் கடைகளில் பீர் பாட்டில் வைக்க போதுமான கூலர் வசதி கிடையாது. பல கடைகளில், கூலிங் பீர்களுக்கு குறைந்தபட்ச விற்பனை விலையை காட்டிலும் ரூ.10 கூடுதலாக பெறப்படுகிறது. தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மாநில அளவில் அனைத்து கடைகளுக்கும் கூலர் தேவைப்படுகிறது. இதற்காக, டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 2 ஆயிரம் கூலர் பெட்டி வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து டாஸ் மாக் நிர்வாகத்தினர் கூறுகையில், கூலர் வசதி குறைவாக உள்ள கடைகளுக்கு புதிய பெட்டி வழங்கப்படும். மின் கட்டணத்தை டாஸ்மாக் நிர்வாகம் செலுத்துவதால், பீர் பாட்டிலுக்கு கூடுதல் கட்டணம் யாரும் தர வேண்டாம், என்றனர்.