பிப்ரவரி 5, தைவான் நாட்டில் 58 பயணிகளுடன் புறப்பட்ட டிரான்ஸ் ஆசிய நிறுவனத்தின் ஏ.டி.ஆர் ரக பயணிகள் விமானம் சாலையில் உள்ள பாலத்தில் மோதி ஆற்றுக்குள் விழுந்தது. இதில் 25 பேர் பலியாயினர். காயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விமானத்தில் பயணம் செய்தவர்கள் பெரும்பாலும் சீனாவைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் என தெரியவந்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் ஒராண்டுக்கு மேல் பயன்படுத்தப்படாமல் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கின்மென் தீவுக்கு நேற்று காலை புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் அவசரநிலை அறிவித்தார் விமானி. கட்டுப்பாட்டை இழந்த விமானம் தைபே நகரில் தாழ்வாக பறந்தது. ரோட்டில் இருந்த பாலத்தின் மீது விமானத்தின் இடது புற இறக்கை மோதியது. பின் கீலங் என்ற ஆற்றுக்குள் விழுந்தது. விமானத்தின் முன்பகுதி பாதி தண்ணீருக்குள் மூழ்கிய நிலையில் விமானம் மிதந்தது.