கோலாலம்பூர், 24 அக்டோபர் 2026 : மலேசியாவின் தொழில்துறை நிறுவனங்கள் உலகளாவிய போட்டிகளை எதிர்கொள்ள, புத்தாக்கம், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ஆராய்ச்சியில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.
2026ஆம் ஆண்டுக்கான தொழில்துறை சிறப்பு விருதுகள் (AKI 2026) வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், உள்ளூர் நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, போட்டித்திறன், புத்தாக்கம் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனை அங்கீகரிப்பது முக்கியம் எனத் தெரிவித்தார்.


தொழில்துறை நிறுவனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு (R&D), டிஜிட்டல் மயமாக்கல், தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்வதுடன், உற்பத்தித் திறனை அதிகரித்து புதிய அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார்.
மலேசியாவை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல பழைய அணுகுமுறைகளிலிருந்து விலகி, புதிய மாற்றங்களைத் துணிச்சலுடன் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்திய அன்வார், தொழில்துறை வளர்ச்சி மூலம் தரமான வேலைவாய்ப்புகள், உயர் திறன் கொண்ட மனிதவளம் மற்றும் மக்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.







