என் தமிழ்

பாண்டான் மக்களுடன் உணவருந்தி கலந்துரையாடிய பிரதமர் அன்வார் இப்ராகிம்

கோலாலம்பூர், 23 அக்டோபர் 2026 : மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், வெள்ளிக்கிழமை தொழுகையைத் தொடர்ந்து தாமான் நிர்வானாவில் உள்ள அல்-முஸ்தகீம் பள்ளிவாசலில் இருந்து, பாண்டான் பகுதி மக்களுடன் மதிய உணவு அருந்தினார். அவர் நாசி சிகு சூ (Restoran Nasi Cikgu Sue) உணவகத்தில் மக்களுடன் அமர்ந்து உணவருந்தியதுடன், அவர்களுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார்.

முன்கூட்டியே எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையிலும், மக்கள் அன்புடன் வரவேற்றதாக அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார். மக்களிடையே நிலவும் சகோதரத்துவமும் நல்லுறவும் தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னை அன்புடன் வரவேற்ற பாண்டான் பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தியுள்ளார்.

Scroll to Top