100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை

100 வருட தமிழ் சினிமாவை ஒரே படத்தில் பேச வைக்கும் ‘ஐ’ – ஆஸ்கர் ரவிச்சந்திரன் நம்பிக்கை

i_13479549911

நவம்பர் 4, ஐ என்ற ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் உயிர் கொடுத்து உழைத்து வருகின்றனர் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன், இயக்குனர் ஷங்கர், நடிகர் விக்ரம், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்… உள்ளிட்ட பலர்.

இப்படி மொத்த பிரமாண்டங்கள் இணைந்து ஒரு படத்தை செதுக்கி செதுக்கி எடுகின்றனர் என்றால் சும்மாவா…! ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அர்னால்ட் வரை கொண்டு வந்த பெருமை தமிழ் சினிமாவுக்கே சேரும். எப்படி இத்தனை வருடங்கள் பணத்தை போட்டு இன்னும் ‘ஐ’ படம் வெளி வர முடியாமல் தாக்கு பிடிக்கிறீர்கள் என்று தயாரிப்பாளரிடம் கேட்டால்…

ஒரு நிமிடம் அமதியாக இருந்தவர்… ஐ படத்தில் இடம்பெற்றுள்ள ”மெர்சலாயிட்டேன்…” என்ற பாடலை போட்டு காட்டினார். உண்மையாகவே அந்தப்பாட்டை பார்த்துவிட்டு மெர்சலாகிவிட்டோம். அந்தளவுக்கு அந்த ஒருபாட்டு மட்டும் இருக்கிறது. விக்ரம்-எமி ஆடிப்பாடும் காட்சிகளில் பல்வேறு கிராபிக்ஸ் காட்சிகளை புகுத்தி எடுத்துள்ளனர்.

உதாரணமாக எமி ஜாக்சன், மீன் போன்றும், டச் போன் போன்றும், மோட்டார் சைக்கிள் போன்றும் உருமாறும் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்து ரசிகர்களே நிச்சயம் மெர்சலாவார்கள். ஐ படத்தின் கிராபிக்ஸ் பணிக்காக சிங்கப்பூர், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ஐதராபாத், மும்பை மற்றும் சென்னையை சேர்ந்த கிராபிக்ஸ் டிசைனர்கள் பணியாற்றி வருகின்றனர்.