என் தமிழ்

தேசிய இளம் விஞ்ஞானிகள் அறிவியல் கண்காட்சி 2026 : வெள்ளிப் பதக்கம் வென்று சாதித்த மூன்று தமிழ்ப்பள்ளிகள்

கோலாலம்பூர், 28 அக்டோபர் 2026 : மலேசியாவில் நடைபெற்ற தேசிய அறிவியல் கண்காட்சியில், ஜோகூர் மற்றும் பேராக் மாநிலங்களைச் சேர்ந்த மூன்று தமிழ்ப்பள்ளிகள் சிறப்பான இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளன. ஜோகூர் மாநிலத்தின் தாமான் துன் அமினா தமிழ்ப்பள்ளி நான்காவது இடத்தையும், பேராக் மாநிலத்தின் புனித தெரசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி ஐந்தாவது இடத்தையும், ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்தச் சாதனைக்காக மூன்று பள்ளிகளின் மாணவர்கள், அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருக்குப் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்களின் கடின உழைப்பு, படைப்பாற்றல் மற்றும் அறிவியல் மீதான ஆர்வம் இந்தச் சாதனைக்குக் காரணமாக அமைந்துள்ளதாகப் பாராட்டப்பட்டுள்ளது. இளம் தலைமுறையினரிடையே அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதிலும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு அவர்களை ஊக்குவிப்பதிலும் இத்தகைய போட்டிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

Scroll to Top