விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு ஆலோசனை வழங்கலாம்

விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு  ஆலோசனை வழங்கலாம்

vik

நவம்பர் 4, தனியார் துறையின் கட்டுமான திட்டங்களில் அரசாங்கம் தலையிய இயலாது. ஆனால் பிரிக்பீல்ட்ஸ் விவேகானந்தா ஆசிரமத்தை இடிக்க வேண்டாமென நில உரிமையாளருக்கு அது ஆலோசனை வழங்கலாம் என கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறியிருக்கிறார். 110 ஆண்டு கால பழமைவாய்ந்த அந்த இந்து பாரம்பரிய கட்டிடம் ஒரு தனியார் நிலத்தில் இருப்பது தான் இதற்கு காரணம்.

இந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே வைத்திருக்கும்படி கட்டுமான நிறுவனத்திற்கும் அறங்காவலர்களுக்கும் அமைச்சம் ஆலோசனை வழங்கும் என்றார் அவர்.