காட்டாற்று வெள்ளத்தில் இருந்து கொம்பன் படக்குழுவை மீட்ட வனத்துறையினர்

காட்டாற்று வெள்ளத்தில் இருந்து கொம்பன் படக்குழுவை மீட்ட வனத்துறையினர்

Karthi-and-Lakshmi-Menon-in-Komban-Tamil-Movie-4

நவம்பர் 3, மெட்ராஸ் படத்திற்கு பிறகு கார்த்தி கொம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்து வருகிறார். ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். கோவை சரளா, ராஜ்கிரண் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அடர்ந்த காட்டுக்குள் நடைபெற்றது. அப்போது திடீரென கனமழை பெய்து, இவர்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த இடத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

விரைந்து செயல்பட்ட வனத்துறையினர் படக்குழுவினரை அந்த இடத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்தனர். இதன்பிறகே படக்குழுவினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

இதையடுத்து, படப்பிடிப்பை ராமநாதபுரத்திற்கு மாற்றினர் படக்குழுவினர். இங்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கான சில காட்சிகளை படமாக்கவுள்ளனர். ‘கொம்பன்’ படத்திற்கு பிறகு கார்த்தி, வெங்கடேசுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.