என் தமிழ்

MH370 முழுசரக்குப் பட்டியல் விபரத்தை மறைத்தது ஏன்: வாய்ஸ் 370

mh17

அக்டோபர், 24 கடந்த 7 மாதங்களுக்கு முன்பு கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த MH370 விமானம் காணமல் போனது. விமானத்தைக் தேடும் நடவடிக்கை தற்போதைய தேடல் பகுதியிலிருந்து விலகி இந்தியப் பெருங்கடலில் மேலும் வெகுதூரத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

விமானத்தில் அனைத்து சரக்குகளின் முழு பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்று வாய்ஸ் 370 என்ற அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

சம்பவம் நடந்த இரண்டு மாதத்திற்குப் பின்னர்தான் சரக்கு பட்டியல் மே 1 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் முழு விபரம் வெளியிடப்படவில்லை என்று அந்த அமைப்பு கூறியது.

முழுசரக்குப் பட்டியல் விபரத்தை மறைத்து வைத்ததுக்கு காரணம் ஏன் என்று அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.

Scroll to Top