டிசம்பர் 30, நேற்று தமிழ்மலர் பத்திரிக்கையில் ம.இ.கா தலைமையகத்தில் குண்டர் கும்பல் என்ற தலைப்பில் பிரசுரிக்கபட்ட செய்தியில் கட்டுக்கடங்காத பொய்களை கூறியிருக்கிறது அந்த நாளேடு பத்திரிக்கை தர்மம் என்று ஒன்று இருப்பதை மறந்து ஏன் இப்படி கண்முடித்தனமாக செயல்படுகிறது என்று தெரியவில்லை.
முதலில் நடந்த விசயத்தை யாரிடமாவது கேட்டிருக்கவேண்டும் அல்லது சம்பந்தப்பட்ட தலைவர்களிடமாவது உண்மையை கேட்டறிந்து விட்டு பேசியிருக்க வேண்டும் நேற்று நடந்த விசயத்தை முற்றிலும் மாற்றி முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று இருக்கிறது அந்த செய்தி.
நேற்று காலையில் ம.இ.கா இளைஞ பிரிவின் ஏற்பாட்டில் நம் இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து அரசாங்கத்தின் வழியும், ம.இ.கா கட்சியின் வழியும் என்னென்ன உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன என்ற ஒரு விளக்கக் கூட்டம் வழங்கப்பட்டது. முறையாக அறிவிப்பாளர். தலைமையுரை, சிறப்புரை, என்று வழங்கப்பட்டு பிறகு SEED உதவிகள் பற்றி அதன் அதிகாரி திருமதி காஞ்சனா அவர்களும் BR1M உதவிகள் பற்றி ம.இ.காவின் துணைசெயலாளர் சகோதரர் முகுந்தன் பொன்னையாவும் வழங்கினர். அதுமட்டுமின்றி நிகழ்ச்சியின் சிறப்பு பிரமுகராக கட்சியின் உதவி தலைவர் செண்ட்டர் டத்தோ விக்னேஸ்வரன் அவர்களும் கலந்து கொண்டு உரையாற்றினார். வருகை தந்த அனைவருக்கும் காலை உணவும் மதிய உணவும் வழங்கப்பட்டது . இதில் என்ன தப்பு இருக்கிறது? அரசாங்கம் வழங்கும் உதவியை சமுதாயத்தில் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதும் ம.இ.காவின் வேலைத்தானே?. ஆக அந்த ஒரு நோக்கத்திற்காக கூடப்பட்ட கூட்டத்தை டத்தோ ஸ்ரீ பழனிவேலின் ஆதரவாளர்கள் வருகையை தடுக்கவே அனைவரையும் திரட்டி இருந்தோம் என்பது முற்றிலும் பொய்.
ஆக ம,இ.காவயும் அதன் தேசிய தலைவர், உதவி தலைவர் விக்னேஸ்வரன் ம.இ.கா இளைஞர் பிரிவு வருகை தந்திருந்த இளைஞர்கள் மீது பழி சிமத்தி குண்டர் கும்பல் என வர்ணித்த தமிழ்மலர் நாளேடு மன்னிப்பு கேட்காவிடில் அடித்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம் என்றி எச்சரிக்கிறேன்.