டிசம்பர் 29, கங்கர், பெர்லிஸ். கடந்த டிசெம்பர் மாதம் 4-ஆம் தேதி முதல் 6-ஆம் தேதி வரை, சுமார் 72 மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழக(UniMAP) இந்திய மாணவர்கள் ஒளி பெறுவோம் எனும் திட்டத்தை அ.நவீன் குமார் (முன்னாள் மாணவ பிரநிதி) தலைமையில் நடத்தினர். இத்திட்டதின் நோக்கம் வடப்பகுதியில் அமைந்திருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் பள்ளிகளின் வசதிகளை மேம்படுத்துவதே ஆகும். அதற்கேற்ப இவ்வாண்டு துன் சம்பந்தன் தமிழ்ப் பள்ளி (சுங்கை பட்டாணி), பாயா காமுண்டிங் தமிழ்ப் பள்ளி (சங்லூன்) மற்றும் சுங்கை டிங்கின் தமிழ்ப் பள்ளி (கூலிம்) தேர்ந்த்தெடுக்கப்பட்ட்து. பல்கலைக்கழக மாணவர்கள் சுமார் இரண்டு நாட்களுக்கு அந்த பள்ளி மாணவர்களுடன் தங்கி பொது நல சேவைகளைச் செவ்வனே செய்தனர். இதே போன்று கடந்த வருடமும் சுங்கை டிங்கின் தமிழ்ப் பள்ளிக்கு மலேசிய பெர்லிஸ் பல்கலைக்கழக(UniMAP) மாணவர்கள் சில உதவிகளை செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் பள்ளியின் கட்ட்டங்களைச் சீரமைப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு சாயம் பூசினர். பள்ளியின் பழுதடைந்த தளவாடங்களை சரி செய்து, பள்ளி வளாகத்தைச் சுத்தம் செய்தனர். மேலும், அறிவியல் மற்றும் வாழ்வியல் திறன் ஆய்வு கூடங்கள் சீர் செய்யப்பட்ட்து. அதுமட்டுமின்றி மாணவர்களுக்குத் தன்முனைப்பு தூண்டல் கருத்தரங்கு, கல்வி சார்ந்த விளையாட்டுகள் மற்றும் சுகாதாரம் குறித்து விளக்க உரையும் அளிக்கப்பட்ட்து. முன்றாவது நாளான 6-திகதி பள்ளி மாணவர்கள் சுமார் 75 மாணவர்களும் பெர்லிஸ் பல்கலைக்கழகத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்கலைகழகத்தின் நூலகத்தைச் சுற்றி காண்பித்ததோடு மட்டுமல்லாமல் பல்கலைகழக மாணவர்களின் வாழ்க்கை முறைபடியும் துரிதமாக விளக்கப்பட்டது. இதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு பல்கலைகழகம் செல்ல வேண்டும் எனும் வேட்கையை இன்னும் மேலோங்க செய்யும்.
இத்திட்டத்திற்கு நமது துணை கல்வி அமைச்சர், மாண்புமிகு ப.கமலநாதன் அவர்களும் புத்ரா ம.இ.கா. தலைவர் யுவராஜா மணியம் அவர்களும் பெருமளவில் ஆதரவைத் தந்தனர். ஒரு மலேசியா இந்தியர் மாணவர்கள் இயக்கம் (1MISM) டாக்டர்.மஹாகணபதி தாஸ் மூலம் இந்த திட்டதிற்கு அவர்களால் இயன்ற உதவிகளைச் செய்தனர். My Skills Foundation-உம் மலேசியா தமிழ் கழகமும் இந்நிகழ்வுக்கு ஆதரவு தந்தனர்.