பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

பிரதமர் தீபாவளி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்

DeepavaliMAICCINajib DeepavaliMICNajib

பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக், அவர்தம் மனைவி டத்தின் ஸ்ரீ ரோச்மா மன்சூர் மற்றும் அமைச்சர் பெருமக்கள் நேற்று 22/10/2014 அன்று கோலாலம்பூரில் நடைபெற்ற இரு வெவ்வேறு தீபாவளி கொண்டாட்டங்களில் கலந்து கொண்டனர்.

முன்னதாக ம.இ.கா புத்ரா உலக வர்த்தக மையத்தில் ஏற்பாடு செய்திருந்த தீபாவளி நிகழ்வில் பிரதமரும் அவரது மனைவியும் கலந்துகொண்டனர். ம.இ.கா தலைவர் டத்தோ ஸ்ரீ ஜி.பழனிவேல், ம.இ.கா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ S. சுப்ரமணியம் மற்றும் இதர ம.இ.கா தலைவர்கள் ஏற்பாடு செய்திருந்த இருந்த நிகழ்வில் பிரதமருடன் அவரது அமைச்சரவை சகாக்களும் கலந்துகொண்டனர்.

”மலேசியர்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்த நமக்கு கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தீபாவளி போன்ற திருவிழாக்கள் அதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக” என கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட பிரதமர் கூறினார்.

ம.இ.கா பொதுச் செயலாளர் திரு. A. ப்ரகாஷ் ராவ் பேசுகையில் இத்தகைய கொண்டாட்டங்கல் தீபாவளிக்கு மட்டுமின்றி, ஹரி ராயா, சைனீஸ் புது வருடம், கிறுஸ்துமஸ் ஆகிய திருவிழாக்களின் போதும் ஏற்பாடு செய்யப்படுவதாக தெரிவித்தார்.

ம.இ.கா ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் சுமார் 5000 பேர் பங்கு கொண்டனர்.

செண்டூலில் உள்ள HGH  மாநாட்டு மையத்தில் மலேசிய இந்தியர்கள் வணிகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு (MAICCI) நடத்திய தீபாவளி கொண்டாட்டங்களில் பிரதமர் நஜீப் அவரது மனைவி ரோச்மா மற்றும் பலர் கலந்து கொண்டு நடைபெற்ற ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தனர். நிகழ்விற்கு MAICCI தலைவர் திரு K.K.ஈஸ்வர்னும் அவரது மனைவியும் ஏற்பாடு செய்திருந்தனர்.

MAICCI ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் பிரதமர், அவரது மனவி, அமைச்சர்கள் மற்றூம் பல்வேறு முக்கியஸ்தர்களுடன் 12 அனாதை இல்லத்தை நேர்ந்த சுமார் 549 பேரும் பங்கு பெற்றனர்.

இந்த இரு நிகழ்விலும் பிரதமரும் அவரது மனைவியும் இந்த பாரம்பரிய உடையில் வந்திருந்தனர்.

d1 d2 d4 d5

d3