MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

MH17 விமான விபத்து: ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் ஒரு சடலம் மீட்பு

mh17-6

அக்டோபர், 10 கடந்த ஜூலை 17-ஆம் தேதி, கிழக்கு உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவர் ஆக்ஸிஜன் மாஸ்க்குடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.அந்த மாஸ்க் பலியான பயணியின் கழுத்தில் சிக்கியிருந்தது.

ஏவுகணை தங்களை நோக்கி வருவது விமானத்தில் பயணம் செய்பவர்களுக்குத் தெரியாது என்றாலும்,ஏவுகணை தாக்கியப் பிறகும் ஆக்ஸிஜன் மாஸ்க் அணியும் அளவுக்கு நேரம் இருந்துள்ளது என நெதர்லாந்து வெளியுறவு அமைச்சர் பிரான்ஸ் திம்மர்மான்ஸ் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இக்கருத்தை அந்நாட்டு அரசு தரப்ப்பு வழக்கறிஞரும் உறுதிபடுத்தியுள்ளார்.